சொல்ல தோணுது
Friday, 5 November 2021
வெளிநாட்டில் தீபாவளி
Wednesday, 5 June 2019
Why Travel is Best??
So many people will say whenever you feel happy, sad, depressed, frustrated go on a short/long trip which will relax your mind.
Yes. Thats right. Travel is the best medicine for a soul which is required strength.
The New place will teach you strong things as how to manage alone and how to be good with people.
A seen place will give you memories and known people to console you and give strength
However you are travelling, the best companion is your earphones.
Each and every song on your playlist will have unique memories and that will keep your soul so fresh and bliss.
Ilaiyaraja songs and window seat are good for calm travellers
Rahman songs and car drive are good for chill out travellers
Beat songs and bike ride are good for rockstar travellers
Keep travel, explore new things, make beautiful memories and live happy life.
#peace
#travel
#travelislife
#soulsearcher
#memoriesbuilder
#worldisyours
Wednesday, 13 May 2015
நம்ம ஊரு நல்ல ஊரு!
சென்னையில் இரயில் ஏறின உடனேயே ஒரு சந்தோஷம். அண்ணண் கிட்ட சண்ட போட்டு ஜன்னல் சீட் வாங்கி எப்படியாவது உக்காந்துடுவேன். அப்போ தான நமக்கு பிடிச்ச ஊர இரசிக்க முடியும்.
இரயிலேர்ந்து இறங்கின உடனேயே மனசு லேசா ஆகிடும். சுற்றுபுற கேடு இல்லாத காற்று. இரயில்வே நிலையத்தில் 10 பேர் தான் இருப்பாங்க. ஆனா அத்தனை பேரும் வாங்க வாங்கனு அன்பா அழைக்கிற விருந்தோம்பல் நான் பிறந்த ஊருல கிடைக்கல. அதை பாதுட்டு அப்பா தன் ஷர்ட் காலர தூக்கி விட்டுபாரு. அவ்ளோ அழகு.
ஊரு மக்கள் பேசர தமிழ் பிரமாதம். எலெய், வாலெய்,போலேய்னு பேசரத இரசிக்கவே நேரம் பத்தாது. நம்ப அதையே பேச முயற்சி பண்ணி தப்பா பேசினா கூட எலேய் குழந்தை எவ்ளோ அழகா பேசறான் பாருனு சொல்லுவாங்க. பாசக்காரங்க.எலேய், கோவத்துலயும் அதிகமானவங்க அவங்க😀
இந்த ஊரோட தனித்தன்மை அல்வா தாங்க. இருட்டு கடைல இருக்குர கூட்டத்தை முண்டி அடிச்சு, சண்டை போட்டு ஒரு அரை கிலோ அல்வா வாங்கறதுக்கு பட்ற கஷ்டம்.. ப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபா.!!!!
ஆனா அவங்க சுட சுட நெய் சொட்ட சொட்ட குடுக்கிற அல்வாவ அப்பிடியே வாய்ல போடும் போது இத வாங்க எவ்ளோ கஷ்டம் வேணாலும் படலாம்னு தோணும்.
தாமிரபரணி ஆறுல குளிச்சுகிட்டே இருக்குற சுகம் தனி. அம்மா அங்க போகாத டா ஆழம் அதிகமா இருக்கும்னு சொல்றதும், விடுடி நம்ப ஊரு தண்ணி நம்ப பையன ஒன்னும் பண்ணாதுனு அப்பா சொல்ற அழகும் இரசிக்கலாம்.
பாட்டி,தாத்தா வீட்ட பாக்கும் போது இங்கயே இருந்து விடலாம்னு தோணும். முன்னோர்கள் குடுத்து வச்சவங்க தான்.
குற்றாலம், பாண தீர்த்தம், திருப்பரப்பு என பல அருவிகளை வைத்து இருக்கும் குளு குளு ஊரு தாங்க நம்ப திருநெல்வேலி!!!!
மண் மனம் மாறாத நம்ப ஊர பத்தி நம்ப சொல்லாம வேர யாரு சொல்லுவாங்க.!!!
.jpg)

.jpg)